Friday, 1 November 2013

ஈர்ப்பு விசை




 
ஒரு வினாடியில் என்னை கடந்துவிட்டால் 
அதற்குள் என் ஓராயுளை முழுங்கி விட்டால் 
ஒருவரி அவள் பேசியதில் என்முகவரி தொலைக்கவைத்தால் 
அவள் ஒருநடை பயணத்தில் என்னை முழுதும் ஊனமாக்கி சென்றுவிட்டால் 
அவள் கண்ணோரம் பார்த்தால் கூட காந்தமாய் ஒட்டுதே என் இதயம் 
உன் ஈர்ப்பு விசை கண்ட நானும் ஒரு நியூட்டன் தான் பெண்ணே !!!

Wednesday, 28 August 2013

கனவெல்லாம் நீதானே 




நித்தம் நடக்குதே ஒரு யுத்தம் தொடருதே 
என் இரத்தம் சாகுதே கண்கள் மூடுதே 
அதில் கலக்கம் பிறக்குதே 
உன் நினைவுகள் வாழுதே 
என் நிஜங்கள் சாகுதே 
உன் காதல் நெருப்பினில்
 என் காலம் எரியுதே 
அந்த கானல் நீரிலும் உன் கலர்படம் தெரியுதே 
உருவம் இல்லாத என் காதல் உயிரோடு
என் நெஞ்சத்தில் ஊமையாய் வாழுதே 
பலர் சத்தம் போட்டாலும்
நான் நித்தம் தோற்றாலும்
உன் மீது  கொண்ட காதல் 
நான் வெகும் வரை தொடருமே
 உன்னாலே !!!