Wednesday 30 November 2011

எங்கே எனது கவிதை!

நீதானடி 

ஒரு முள்ளுடன் மோதிக்கொண்டு இருக்கிறேன் இந்த ரோஜாவை தாங்குவதற்காக
♥ 
இரவில் விளக்கு அனைத்தும் விடியல் தேடிக்கொண்டு இருந்தேன் உன் நினைவோடு
♥ ♥ 
என் போர்வையை முடியவுடனே என் காதலும் என்னை பற்றிகொள்கிறது பல்லாயிரம் முறை நீ காதல் சொல்வதாக உணர்கிறேன் உன்னோடு வாழ்கிறேன் உன்னாலே
♥ ♥ ♥ 
நான் உறங்கும் பொது என்னுள் உன்னை பற்றி ஆயரம் கவிதை தோன்றி மறைகிறது மறுநாள் காலையில் நான் யோசித்தால் என் நினைவில் வருவது கவிதையாக உன் பெயர் மட்டும் தான்
♥ ♥ ♥ ♥ 
அழகான மின்மினி பூச்சியாய் என் இரவை வெளிச்சமாக்குகிறது உன் காதல்
♥ ♥ ♥ ♥ ♥ 
ஒரு வானவில் தேடி அலைந்து கொண்டு இருந்தேன் உன்னை எதிரில் பார்த்ததும் இதயத்துள் தன்னாலே மழை பெய்தது
♥ 
என் ஜன்னல் தேடி வந்த கற்றாய் நீ என் தோட்டத்து முள்ளையும் பூக்க செய்து செல்கிறாய்
♥ ♥ 
நீ கண் சிமிட்டும் சிலவினாடிகள் மட்டும் தான் உன்னை நான் நேராக பார்த்து ரசிபதற்கான சந்தர்ப்பம் நீ கண்விழித்தால் அய்யோ! ஆயரம் அணு உலையாய் என்னை வெடித்து சிதரடிகிறது உன் ஒற்றை பார்வை
♥ ♥ ♥ 
ஆயரம் வார்த்தை உன்னோடு பேசினாலும் நான் அசந்து போகமாட்டேன் ஆனால் உன் சிறு புன்னகை என்னை முச்சடைக்க செய்துவிடும்
♥ ♥ ♥ ♥ 
உன்னுடன் கை கோர்த்து இருப்பதாக உணர்கிறேன் நான் பூக்கள் பறிக்கும் போது
♥ ♥ ♥ ♥ ♥
மழை நின்றும் கிளைகள் துருவது போல் நீ சென்ற பின்னும் உன் காதல் என்னையே சுற்றுகிறது
♥ 
தெரிந்தும் தெரியாமலுமாய் நம் காதலால் நாம் பின்னி பிணைந்து கொண்டு இருக்கிறோம்
♥ ♥ 
நான் தனியாக பயணிக்கும் போது ஜன்னல் ஓர கம்பிகளும் நான் கேட்கும் பாடல்களும் தூரத்தில் பறக்கும் பறவைகளும் கடை பலகைகளும் உன்னை ஞாபகம் படுத்தியே என்னுள் பயணிக்கும்
♥ ♥ ♥ 
ஒற்றை புன்னகையில் என்னை ஓராயிரம் மைல் கடத்தி செல்கிறாய் 
♥ ♥ ♥ ♥ 
என் தலையணையில் படுத்த உடனே உன் நினைவுகள் என்னை தாலாட்ட தொடங்கிவிடுகிறது என்ன மாயம் அது வலியும் மறந்து போகும் 
♥ ♥ ♥ ♥ ♥ 
உனக்காக காத்திருக்கும் நேரங்கள் நெறிஞ்சு முள்ளாய் என்னை குத்தும் நீ வந்து சிந்தும் இதழ் ஓர புன்னகை துரிகையால் என்னை வருடியது போல் சிலிர்க்க செய்திவிடும் பின் எங்கே மிஞ்சும் கோவம் 
♥ 
தூக்கத்தில் சிரிக்கும் மழலை குழந்தையாய் உன் காதல் என்னை சுண்டி இழுக்கிறது அவ்வளவு உண்மை அழகு 
♥ ♥ 
எத்தனை முறை செதுகினாலும் மாறாத சிற்பம் உன் காதல் மட்டும் தான்  பெண்ணே என்மீது
♥ ♥ ♥
என்றுமே உன் நிழலை பின் தொடரும் ஆசையில்லை எனக்கு உன் நிழலாக பின்தொடரும் ஆசைமட்டும் தான் காத்திருக்கிறேன்
♥ ♥ ♥ ♥ 
நிலவாக நீ இருக்கிறாய் தேய்ந்து மறைந்து வளர்வது மட்டும் நான் உன் நினைவுகளால்
♥ ♥ ♥ ♥ ♥ 
நமக்காகவே வாழ்ந்த நாட்கள் நம் இதயத்தில் பிறந்த குழந்தையாய்
எந்நேரமும் சிணுங்கிக்கொண்டே இருக்கும் யார் அறிவார் எதற்கு என்று 
♥ 
உன் கூந்தலோடு மட்டும் எப்பொழுதும் கவிதை எழுதுகிறது உன் கை விரல்கள் 
அழகு தான் 
♥ ♥ 
உன் மூச்சுகாற்று காற்றில் கலக்கிறது எனக்கு மட்டும் ஏன் சங்கிதமாய் கேட்கிறது 
♥ ♥ ♥ 
ஒரே குடையில் இருவரும் நனைந்தது பாதி நனையாதது பாதியாய் நம் காதல் 
♥ ♥ ♥ ♥ 
ஒரு கோடி பூக்கள் ஒன்றாக சேர்ந்து மொட்டுவிரித்தால் அவ்வளவு அழகு உன் காதலும் நீயும்
♥ ♥ ♥ ♥ ♥ 

Sunday 27 November 2011

புது கவிதை


உன் காதோரம் மட்டும் கவிதை சொல்கிறது உன் கூந்தல் முடி அழகுதான்... பெண்ணே 

கோலம்


நீ புள்ளிகள் மட்டும்தான் வைத்தாய் உன்  அழகை பார்க்கும் ஆசையில் தன்னைதானே இணைத்து கொண்டு புன்னகை செய்கிறது இந்த கோலங்கள் .............அழகுதான் நீ 

Friday 25 November 2011

புல்லாங்குழல்


முங்கிலாக நான் இருக்கிறேன் மறங்கொத்தியாக என்னை நீ கொத்தினாலும் புல்லாங்குழலாக இசைத்திடுவேன் பெண்ணே............... உனக்காக  என்னுயிரே ..

காலம் தாண்டி


அப்பொழுது சொற்கள்  இன்றியும் பேசிகொண்டோம்
இப்பொழுது பற்கள் இன்றியும் பேசிகொள்கிறோம் நம் காதலால் 

கவிதை கண்



எங்கிருந்து கற்று கொண்டோம் கண்களால் கவிதை சொல்ல நீயும் 
அதை புரிந்து கொள்ள நானும்.......அதிசயம் தான் 

முத்தம்


பரிமாற முடியாத உணர்வுகளின் மௌன வெளிப்பாடு முத்தம் சிறு சத்தத்தோடு.. 

தென்றல்


தூரமாக நீ இருந்தாலும் உன்னை தொட்டு செல்லும் ஆசையில் தான் வந்து போகிறேன் தென்றலாக.... 

அற்புதம்


காண முடியாத காட்சிதான் அவள் 
என் கண்கள் மட்டும் அதன் சாட்சிதான் 
தினமும் பார்கிறேன்  எங்கும் புதிதாய் எதிலும் புதிதாய்
தெரிகிறாள் என் உயிர் தோழியே அது  நீயடி...

பனி இதயம்



உன்  முதல் பார்வையிலும் முதல் வார்த்தையிலும் தன்னால் கரைகிறது என் இதயம் உன் முன்னால் உன்னை 
பக்குவமாய் பார்த்து பார்த்து செய்த பனி சிலை என்காதல் 
வெப்பமாய் நீ நெருங்கி வந்தால் தாங்குமா பெண்ணே


நினைவோடு நான்


நினைவோடு மீதம் உள்ள நாள்வரை உன் காதலில்  வாழ்ந்து இருப்பேன் 
பேதம் ஒன்று ஏற்படின் இலையாய்  உதிர்ந்திடுவேன் 
கண்ணோடு ஈரமாய் உன் காதலில் வாழ்ந்து இருப்பேன் 
அது கரையும் நாள் வந்தால் கரையானின் உணவாய் இருப்பேன்

படகாக



ஒரு படகாக மிதக்கிறேன் உன் இதயத்தில் 
காதல் கரை தேடி தவிக்கிறேன் தன்னாலே......

புன்னகை



அவளும் திவிரமொழி பற்று கொண்டவள் தான் அவள் மொழியால் வென்றுவிட்டால் என்னையும் என் காதலையும்

அவள் மொழி புன்னகை

வெள்ளம்


உன்னை பிரிகையில் மட்டும் கண்கள் வெள்ளத்தில் மிதக்கிறது என்ன செய்தாயடி பெண்ணே நீ...

என்னுள் எரிகிறேன்



எனக்குள் அயிரம் தீக்குச்சி எரிகிறது
அவள் என்னை உரசி சென்றதும்................

அவளால் நான்


அவள் புன்னகையில் ஏனோ நான் புதையலாய்  ஆகின்றேன் 
குடை இருந்தும் நனைகிறேன் ஏனோ இந்த காதல் மலையில் 
கருவறை இன்றியும் பூக்குதே காதல் அதிசயமாய் 
அவள் முதல் மௌனத்தில் தான் என் காதல் தொடங்கியதோஅழகாக 
விட்டு விட சொல்லும் என் இதயமும் தொட்டு தொட்டு பார்க்குது என் காதலை கோட்டி விடும் என்பதனால் பொத்தி பொத்தி வைக்குது என்னஞ்சமும் சுட்டு விடும் ஆசையில் ஒரு சூரியனும் ஏங்குதோ ஒரு காலையில் எட்டி எட்டி அவளை பார்த்திட உள்ளுர ஒரு அசையும் ஏங்குதே  பட்டும் படாமலும் ஒரு காதலும் நடக்குதோ என் நெஞ்சினில்..
இனி அவள் தேவைகள் எல்லாம் செய்திடுவேன் ஒரு சேவையாக என் காதலால் ..............



Thursday 24 November 2011

காதல் சொல்ல வந்தேன் ..


 உன்னை பார்க்கவந்த நேரம் முழுவதுமாய் இருளவும்
  இல்லை வெளிச்சமும் இல்லை 
 அழகான அந்தி மாலை பொழுது தென்றல் வீசும் நேரம் 
 தூரத்தில் வெண்ணிலாவும் மெதுவாக 
 கண்விழிக்கிறது 
 காத்துருகிறது காதல் அரங்கேற 
 புதிராய் ஒரு வானவில் வந்துபோகிறது அழகாக 
 பறக்கும் வண்ணத்துபூச்சியும் ஒரு நிமிடம் 
 என்னை நின்று பார்ப்பது போன்ற ஒரு உணர்வு 
 தூரத்தில் நீ வருவதை உன் கொலுசுகள் உச்சரித்தது
 உன் முச்சு காற்று ஒரு தென்றலாய் 
 என்னை வருடி சென்றது 
 உன் சப்தம்கேட்டு என் இதய துடிப்பும் பெருகியது 
 உன் விழி வார்த்தைக்காக காத்திருந்தேன் 
 நான் காதல் சொல்லவந்தேன் உன்னிடம் ..................

குழந்தை



பிள்ளை முகம்  பார்த்து  நிலவை  மறந்தோம் 
அவன் புன்னகை பார்த்து சொர்க்கத்தில் பறந்தோம்  
அவன் மொழி கேட்டு நாம் புது மொழி கற்றோம் 
அவன் அழுகையை பார்த்து நம் சதைவலி உணர்ந்தோம் 
அவன் தவழ் நடையில் நாமும் சேர்ந்து மிதந்தோம் 
அவன் கண்களில் புது உலகம் கண்டோம் 
அவன் செய்கைகளில்  நாம் செயலிலந்தோம்
அவன் பிஞ்சு கைகளில் நம் எதிர்காலம் பார்த்தோம் 
அவன் சேட்டைகளை நாமும் சேர்ந்து ரசித்தோம் 
அவன் முத்தத்தால் நாம் மூச்சடைத்து நின்றோம் 

கருவறை பூக்கலாம் இந்த குழந்தை  
கடவுளின் தாக்கமாம் இந்த குழந்தை .....