Thursday, 24 November 2011

குழந்தை



பிள்ளை முகம்  பார்த்து  நிலவை  மறந்தோம் 
அவன் புன்னகை பார்த்து சொர்க்கத்தில் பறந்தோம்  
அவன் மொழி கேட்டு நாம் புது மொழி கற்றோம் 
அவன் அழுகையை பார்த்து நம் சதைவலி உணர்ந்தோம் 
அவன் தவழ் நடையில் நாமும் சேர்ந்து மிதந்தோம் 
அவன் கண்களில் புது உலகம் கண்டோம் 
அவன் செய்கைகளில்  நாம் செயலிலந்தோம்
அவன் பிஞ்சு கைகளில் நம் எதிர்காலம் பார்த்தோம் 
அவன் சேட்டைகளை நாமும் சேர்ந்து ரசித்தோம் 
அவன் முத்தத்தால் நாம் மூச்சடைத்து நின்றோம் 

கருவறை பூக்கலாம் இந்த குழந்தை  
கடவுளின் தாக்கமாம் இந்த குழந்தை .....

No comments:

Post a Comment