Friday, 1 November 2013

ஈர்ப்பு விசை
 
ஒரு வினாடியில் என்னை கடந்துவிட்டால் 
அதற்குள் என் ஓராயுளை முழுங்கி விட்டால் 
ஒருவரி அவள் பேசியதில் என்முகவரி தொலைக்கவைத்தால் 
அவள் ஒருநடை பயணத்தில் என்னை முழுதும் ஊனமாக்கி சென்றுவிட்டால் 
அவள் கண்ணோரம் பார்த்தால் கூட காந்தமாய் ஒட்டுதே என் இதயம் 
உன் ஈர்ப்பு விசை கண்ட நானும் ஒரு நியூட்டன் தான் பெண்ணே !!!

Wednesday, 28 August 2013

கனவெல்லாம் நீதானே 
நித்தம் நடக்குதே ஒரு யுத்தம் தொடருதே 
என் இரத்தம் சாகுதே கண்கள் மூடுதே 
அதில் கலக்கம் பிறக்குதே 
உன் நினைவுகள் வாழுதே 
என் நிஜங்கள் சாகுதே 
உன் காதல் நெருப்பினில்
 என் காலம் எரியுதே 
அந்த கானல் நீரிலும் உன் கலர்படம் தெரியுதே 
உருவம் இல்லாத என் காதல் உயிரோடு
என் நெஞ்சத்தில் ஊமையாய் வாழுதே 
பலர் சத்தம் போட்டாலும்
நான் நித்தம் தோற்றாலும்
உன் மீது  கொண்ட காதல் 
நான் வெகும் வரை தொடருமே
 உன்னாலே !!!  

Saturday, 14 January 2012

வரையறுக்கபடாத காதல்....

கூட்டலாக ஒன்றாய் சேர்ந்து
கழித்தலாக அகம்பாவங்களை வெறுப்புகளை எல்லாம் நீக்கி
பெருக்களாக நம் அன்பு பெருகி
வகுத்தலாக நம் வாழ்க்கை வகுக்கபடுகிறது நெறிமுறைகளோடு
முடிவிலியாக நம் காதல் தொடர......

              வரையறுக்கபடாத இந்த காதல் கணக்கால் நம் வாழ்க்கையும்! 

Wednesday, 11 January 2012

ஈரக்காடுகள்

என் நெஞ்சம் தான் கொஞ்சம் ஏங்குதே உன் காதல் தான் அதில் தங்குதே
விடியும் வரை காத்திருந்ததே இனி வீழும் வரை காத்திருக்குமே 
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


என் வானமும் பூமியும் உன் புன்னகையில் மறையுதே
உன் காதலே என் உலகமாய் உன்னையே சுற்றுதே
எங்கே சென்றாய் பெண்ணே என் ஆயுள் நீதான் கண்ணே!

வீசும் காற்றை நான் உன்னை உரசி போக
தீக்கள் இன்றியே நான் எரிந்தே தள்ள
என் சொர்க்கம் எல்லாம் உன் சொந்தத்தில் தான்
நீ என் பக்கம் வந்தால் உன் பந்தத்தில் தான் 
நீ தள்ளி சென்றால் தீ பந்தத்தில் நான்
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


ஒரு விலை இல்லா உன் காதல் கொண்டேன்
ஒரு வேதியியல் வினையாக உன்னில் சேர்ந்து கொண்டேன்
எங்கே சென்றாய் பெண்ணே என் ஜீவன் நீதான் கண்ணே!


ஒரு இடை நில்லா பயணம் இது
உன் காதல் வேகத்தடை வடுக்கள் மீது
ஒரு குடுவையில் நான் மிதக்கிறேன் உனக்காக தவம் இருக்கிறேன்
ஒரு குழிக்குள்ளே நான் புதைகிறேன்
நீ காதல் தந்தால் உயிர்தேலுகிறேன் அன்றே
என்னுலகம் விடியாமல் போகட்டுமே உன் மடிசாயும் வேளையிலே
நான் தோகைவிரித்த மயில் ஆகிறேன் உன் தோள் சாயும் நிமிடத்திலே 
எங்கே சென்றாய் பெண்ணே என் சுவாசம் நீதான் கண்ணே!


ஒரு இலையாக நான் உதிர்கிறேன்
நீ காதல் தந்தால் மிதந்து பிழைக்கிறேன் பெண்ணே
இடைவிடாத ஆசையினால் உனக்கும் சேர்த்து இருநெஞ்சமாய் என் இதயம் துடிக்க கேட்கிறேன் 
உன் காதல் தந்துவிடு இல்லை உன் கையால் கொன்றுவிடு
என் உலகம் இருண்டால் என்ன உன் விழிகள் திறந்தால் போதும்
உறுமும் சிங்கம் கூட உன் பார்வை பட்டால் உளறும் குழந்தை ஆகும்
கடவுள் தந்த வரம் நீதான் என் கையில் வந்த நிஜம் நீதான்   
எங்கே சென்றாய் பெண்ணே என் நேசம் நீதான் கண்ணே!


உன் தோள் சாய்ந்தால் போதும் என் தோல்வி எல்லாம் கலைந்தே ஓடும்
உன் தூரம் குறைந்தால் போதும் என் துக்கம் தானே மாறும்
உன் கரம் பிடித்து நடந்தால் போதும் என்காலம் எல்லாம் எளிதில்கடந்து போகும்
உன் அரவணைபில் நான் இருந்தால் போதும் அந்த காலன் கூட என் காலடியில்
சாகும் பெண்ணே 
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


நீ என்னை விட்டு நகர்கையில் என் நினைவுகள் உன் கால்தடத்தில் புதைந்து மறைகிறதே 
விலகி செல்லாதே விலை இல்லாதவனாய் ஆகிவிடுவேன் பெண்ணே
எங்கே சென்றாய்  பெண்ணே என் உயிர் நீதான் கண்ணே!

ஈரக்காடுகளாய் என் நெஞ்சம் உன் நினைவால் ஈசல் ஆடுகிறதே 
இழைபார நிழலும் இன்றி காய்ந்து போகிறதே 
கடல் நீரிலலே கரைந்த உப்பாகிறதே 
வெளிச்சம் தேடி அலையும் விட்டிலாய் பறக்கிறதே
ஒரு விசையால் ஈர்க்கபட்ட காந்தம் ஆகிறதே   
நீ கருவறையில் சுமந்த என் காதலை தேடுகையில் பெண்ணே 
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


புழுங்கி கொண்டிருக்கும் என் மனம் 
 அது புழுதியால் மூடும் வரை  உன் நினைவுகளோடு மட்டும் 
எங்கே சென்றாய் பெண்ணே?

Thursday, 5 January 2012

எல்லாம் உன்னால்


நட்பில் ஆழ்ந்திருந்தேன் 
காதலை காட்டினாய்! 

காதலில் வாழ்ந்திருந்தேன் 
பிரிவை ஊட்டினாய்! 

பிரிவால் உதிர்ந்திருந்தேன் 
நினைவால் வாட்டுகிறாய்!

நினைவால் வாடுகிறேன்
நிஜத்தால் விரட்டுகிறாய்! 


நிஜத்தை தேடுகிறேன் 
நிழலால் துரத்துகிறாய்! 

நிழலில் ஒழிகிறேன் 
வெளிச்சத்தால் மிரட்டுகிறாய்! 

வெள்ளிச்சத்தில் மறைகிறேன் 
இருளாய் சூழ்கிறாய்! 

இருளில் புதைகிறேன்!! மீண்டும் ஒருமுறை 

கவிபாடி கல்லறையில் 
விட்டுவிடு பெண்ணேஉன்னால் மட்டுமே முடியும் 
இன்னும் நான் என்ன செய்ய

தவிப்புகள்

என் தவிப்பு உன் இதயத்தை திருடியதலோ
என் வரிகளின் தவிப்புகள் உன் காதலை அழகாக சொல்லவோ  
என் காதலின் தவிப்பு உன் இதயத்தை சேரவோ  
என் இதயத்தின் தவிப்பு உனக்காக துடிக்கவோ 

இருட்டை திறந்து வராத தவிப்புகள் வெள்ளிச்சம் சேராது 
என் தவிப்புகளால் தூக்கி எறியப்பட்டு விழுந்த ஆழ்கடல் இந்த காதல் 
நத்தையாய் நகர்கிறது என் நாட்கள் உன் தவிப்பால் போதும் பெண்ணே 
உனக்காக காத்திருக்கும் என் தவிப்பு உன்னை பார்த்தவுடன் தடம் புரல்கிறது
ஏன் தணலாக வெகுறேன் உன் குளிர் போக்கும் தவிப்பில் தானாதொடக்கத்தின் தவிப்பு முடிவை தேடி 
கடலின் தவிப்பு கரைதாண்டும் வரை 
தளிரின் தவிப்பு இதழ் விரியும் வரை 
நானும் அவ்வாரே உன்னை சேரும்வரை தவித்து கொண்டே இருப்பேன்  

தவிப்புகள் தொடரும் உன் இறுதி மூச்சையும் நான் சுவாசிக்கும் வரை 
என் தவிப்பை எல்லோரும் ரசிக்கிறார்கள் வரிகளாக உன் தவிப்பை நான் மட்டும் ரசித்து கொண்டிருக்கிறேன் காதலாக!

என்ன செய்ய என்று தெரியாத என் தவிப்புகள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் காதலாகிறது 
என் தவிப்புகள் எல்லாம் காதல் சொல்லும் ஒருநாள் கற்றாக வந்து!  உன் காதோரம் அழகாக  
தவிப்புகள் முடியும் வரை உன் வெட்கம் தொடரட்டும் பெண்ணே இங்கே

விழி பார்க்கும் என் தவிப்பு புரியாமல் விலகி செல்கிறாய் 
என் தவிப்பு புரிந்தும் என்னை தவிக்க விட்டு சென்றாய் தவிர்க்க முடியாமல் தவித்து கொண்டுடிருக்கிறேன் 
சந்தோஷமாய் ஏன் என்றால் நான் தோற்றது உன்னிடம் தான்! தவிப்புடன்
இன்றும் நான் தொடர்கிறேன் உன் நினைவுகளை! 
                                                           பிழை இல்லாமல் Sunday, 1 January 2012

யாதுமாகி நின்றாய்!


ன் கரங்கள் பற்றியே என்காலம் முற்றுதே 
ன் ஆசை காதலும் உன்னை சுற்றுதே 
ன் பாதையும் உன் நிழலை தொடருதே 
ன் வேகம் எல்லாம் உன் விழியில் சிக்குதே
ன் விசை எல்லாம் உன்னை ஈர்க்கும் ஆசையில் புதையுதே 
ன் குழந்தை மனமும் உன் மடி சாயுதே 
ன் வேர்கள் எல்லாம் உன் மனதை பற்றுதே
ன் பிரியங்களால் என் இதயமேகம் கரையுதே 
ன் காதல் வானவில்லும் கொஞ்சம் வலையுதே 
ன் ஆசைகள் எல்லாம் உன் அன்பில் தவிக்குதே 
ன் நேச அலைகளும் உன் மனதை நனைக்குதே 
ன் ஆசை வார்த்தைகளையும் உன் மௌனம் திங்குதே


ன் இரவல் நட்பும் இன்று காதலாகுதே 
ன் எல்லா எல்லைகளும் உன் முன்னே முடியுதே 
ன் புது உலகமும் நீயாக தொடங்குதே
ன் காதலை தாண்டியும் புது அன்பு தொடருதே 
ன் வாழ்நாள் தவமும் வரமாய் கிட்டுதே 
ன் பிரியா ஆறுதல்களும் பிரியங்களாய் மாறுதே
ன் மூச்சு காற்று தொட்டவுடன் என் முதல் சுற்று அடங்குதே 
ன் பாசமும் என்னை சுற்றி அரணாய் விரியுதே 
டைவேளை இன்றியே ஒரு நாடகமும் தொடருதே 
ண்டும் காணாமலும் ஒரு தயக்கம் நீழுதே
தொடரும் ஆசையெல்லாம் உன்னாலே மயங்குதே!