Wednesday, 11 January 2012

ஈரக்காடுகள்

என் நெஞ்சம் தான் கொஞ்சம் ஏங்குதே உன் காதல் தான் அதில் தங்குதே
விடியும் வரை காத்திருந்ததே இனி வீழும் வரை காத்திருக்குமே 
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


என் வானமும் பூமியும் உன் புன்னகையில் மறையுதே
உன் காதலே என் உலகமாய் உன்னையே சுற்றுதே
எங்கே சென்றாய் பெண்ணே என் ஆயுள் நீதான் கண்ணே!

வீசும் காற்றை நான் உன்னை உரசி போக
தீக்கள் இன்றியே நான் எரிந்தே தள்ள
என் சொர்க்கம் எல்லாம் உன் சொந்தத்தில் தான்
நீ என் பக்கம் வந்தால் உன் பந்தத்தில் தான் 
நீ தள்ளி சென்றால் தீ பந்தத்தில் நான்
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


ஒரு விலை இல்லா உன் காதல் கொண்டேன்
ஒரு வேதியியல் வினையாக உன்னில் சேர்ந்து கொண்டேன்
எங்கே சென்றாய் பெண்ணே என் ஜீவன் நீதான் கண்ணே!


ஒரு இடை நில்லா பயணம் இது
உன் காதல் வேகத்தடை வடுக்கள் மீது
ஒரு குடுவையில் நான் மிதக்கிறேன் உனக்காக தவம் இருக்கிறேன்
ஒரு குழிக்குள்ளே நான் புதைகிறேன்
நீ காதல் தந்தால் உயிர்தேலுகிறேன் அன்றே
என்னுலகம் விடியாமல் போகட்டுமே உன் மடிசாயும் வேளையிலே
நான் தோகைவிரித்த மயில் ஆகிறேன் உன் தோள் சாயும் நிமிடத்திலே 
எங்கே சென்றாய் பெண்ணே என் சுவாசம் நீதான் கண்ணே!


ஒரு இலையாக நான் உதிர்கிறேன்
நீ காதல் தந்தால் மிதந்து பிழைக்கிறேன் பெண்ணே
இடைவிடாத ஆசையினால் உனக்கும் சேர்த்து இருநெஞ்சமாய் என் இதயம் துடிக்க கேட்கிறேன் 
உன் காதல் தந்துவிடு இல்லை உன் கையால் கொன்றுவிடு
என் உலகம் இருண்டால் என்ன உன் விழிகள் திறந்தால் போதும்
உறுமும் சிங்கம் கூட உன் பார்வை பட்டால் உளறும் குழந்தை ஆகும்
கடவுள் தந்த வரம் நீதான் என் கையில் வந்த நிஜம் நீதான்   
எங்கே சென்றாய் பெண்ணே என் நேசம் நீதான் கண்ணே!


உன் தோள் சாய்ந்தால் போதும் என் தோல்வி எல்லாம் கலைந்தே ஓடும்
உன் தூரம் குறைந்தால் போதும் என் துக்கம் தானே மாறும்
உன் கரம் பிடித்து நடந்தால் போதும் என்காலம் எல்லாம் எளிதில்கடந்து போகும்
உன் அரவணைபில் நான் இருந்தால் போதும் அந்த காலன் கூட என் காலடியில்
சாகும் பெண்ணே 
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


நீ என்னை விட்டு நகர்கையில் என் நினைவுகள் உன் கால்தடத்தில் புதைந்து மறைகிறதே 
விலகி செல்லாதே விலை இல்லாதவனாய் ஆகிவிடுவேன் பெண்ணே
எங்கே சென்றாய்  பெண்ணே என் உயிர் நீதான் கண்ணே!

ஈரக்காடுகளாய் என் நெஞ்சம் உன் நினைவால் ஈசல் ஆடுகிறதே 
இழைபார நிழலும் இன்றி காய்ந்து போகிறதே 
கடல் நீரிலலே கரைந்த உப்பாகிறதே 
வெளிச்சம் தேடி அலையும் விட்டிலாய் பறக்கிறதே
ஒரு விசையால் ஈர்க்கபட்ட காந்தம் ஆகிறதே   
நீ கருவறையில் சுமந்த என் காதலை தேடுகையில் பெண்ணே 
எங்கே சென்றாய் பெண்ணே என் காதல் நீதான் கண்ணே!


புழுங்கி கொண்டிருக்கும் என் மனம் 
 அது புழுதியால் மூடும் வரை  உன் நினைவுகளோடு மட்டும் 
எங்கே சென்றாய் பெண்ணே?

No comments:

Post a Comment