Thursday, 24 November 2011

கரைகிறேன்


உன் மூச்சு காற்றில் நான் சுவாசித்த தருனங்கள்
உன் கை பிடித்து குழந்தையாக நான் சென்ற பயணங்கள் 
சொற்கள் திர திர நாம் பேசிய நேரங்கள் 
உன் மௌனத்தில் நான் உணர்ந்த அர்த்தங்கள் 
என்னை முழுவதுமாக ஏற்று என் தோலில் நீ சாய்ந்த நிமிடங்கள் 
செல்லமாக சில சண்டைகள் 
கோவமாக சில எச்சரிக்கைகள் 
தவறுகளுக்காக கேட்கும் மன்னிப்புகள் 
எனக்காகவே நீ செய்த தியாகங்கள்
தூரத்தில் கேட்கும் பாடலுக்கு முனங்கும் உன் உதடுகள்
எனக்காக மட்டும் நீ செய்யும் சில பிராத்தனைகள்
எனக்காக மட்டும் துடிக்கும் உன் இதயம் 
சந்தோஷ நாட்களில் நீ செய்யும் முதல் வாழ்த்துக்கள் 
தோல்வி அடையும் போதும் எதுவும் இல்லாத போதும்
நான் இருகிறேன் என்று நீ சொல்லும் வார்த்தைகள் 
என் கஷ்டங்களில் பங்கெடுக்கும் உன் கண்ணீர் துளிகள் 
கண்ணீர் துளியில் நான் கண்ட உண்மையான காதல் 
நான் வெற்றி அடையும் போது பரிசாக நீ தரும் முதல் புன்னகைகள் 
இவையாவும் கரையாத காதலில் நாம் கரைந்த நாட்கள்....

3 comments: