நீதானடி |
ஒரு முள்ளுடன் மோதிக்கொண்டு இருக்கிறேன் இந்த ரோஜாவை தாங்குவதற்காக
♥
இரவில் விளக்கு அனைத்தும் விடியல் தேடிக்கொண்டு இருந்தேன் உன் நினைவோடு
♥ ♥
என் போர்வையை முடியவுடனே என் காதலும் என்னை பற்றிகொள்கிறது பல்லாயிரம் முறை நீ காதல் சொல்வதாக உணர்கிறேன் உன்னோடு வாழ்கிறேன் உன்னாலே
♥ ♥ ♥
நான் உறங்கும் பொது என்னுள் உன்னை பற்றி ஆயரம் கவிதை தோன்றி மறைகிறது மறுநாள் காலையில் நான் யோசித்தால் என் நினைவில் வருவது கவிதையாக உன் பெயர் மட்டும் தான்
♥ ♥ ♥ ♥
அழகான மின்மினி பூச்சியாய் என் இரவை வெளிச்சமாக்குகிறது உன் காதல்
♥ ♥ ♥ ♥ ♥
ஒரு வானவில் தேடி அலைந்து கொண்டு இருந்தேன் உன்னை எதிரில் பார்த்ததும் இதயத்துள் தன்னாலே மழை பெய்தது
♥
என் ஜன்னல் தேடி வந்த கற்றாய் நீ என் தோட்டத்து முள்ளையும் பூக்க செய்து செல்கிறாய்
♥ ♥
நீ கண் சிமிட்டும் சிலவினாடிகள் மட்டும் தான் உன்னை நான் நேராக பார்த்து ரசிபதற்கான சந்தர்ப்பம் நீ கண்விழித்தால் அய்யோ! ஆயரம் அணு உலையாய் என்னை வெடித்து சிதரடிகிறது உன் ஒற்றை பார்வை
♥ ♥ ♥
ஆயரம் வார்த்தை உன்னோடு பேசினாலும் நான் அசந்து போகமாட்டேன் ஆனால் உன் சிறு புன்னகை என்னை முச்சடைக்க செய்துவிடும்
♥ ♥ ♥ ♥
உன்னுடன் கை கோர்த்து இருப்பதாக உணர்கிறேன் நான் பூக்கள் பறிக்கும் போது
♥ ♥ ♥ ♥ ♥
மழை நின்றும் கிளைகள் துருவது போல் நீ சென்ற பின்னும் உன் காதல் என்னையே சுற்றுகிறது
♥
தெரிந்தும் தெரியாமலுமாய் நம் காதலால் நாம் பின்னி பிணைந்து கொண்டு இருக்கிறோம்
♥ ♥
நான் தனியாக பயணிக்கும் போது ஜன்னல் ஓர கம்பிகளும் நான் கேட்கும் பாடல்களும் தூரத்தில் பறக்கும் பறவைகளும் கடை பலகைகளும் உன்னை ஞாபகம் படுத்தியே என்னுள் பயணிக்கும்
♥ ♥ ♥
ஒற்றை புன்னகையில் என்னை ஓராயிரம் மைல் கடத்தி செல்கிறாய்
♥ ♥ ♥ ♥
என் தலையணையில் படுத்த உடனே உன் நினைவுகள் என்னை தாலாட்ட தொடங்கிவிடுகிறது என்ன மாயம் அது வலியும் மறந்து போகும்
♥ ♥ ♥ ♥ ♥
உனக்காக காத்திருக்கும் நேரங்கள் நெறிஞ்சு முள்ளாய் என்னை குத்தும் நீ வந்து சிந்தும் இதழ் ஓர புன்னகை துரிகையால் என்னை வருடியது போல் சிலிர்க்க செய்திவிடும் பின் எங்கே மிஞ்சும் கோவம்
♥
தூக்கத்தில் சிரிக்கும் மழலை குழந்தையாய் உன் காதல் என்னை சுண்டி இழுக்கிறது அவ்வளவு உண்மை அழகு
♥ ♥
எத்தனை முறை செதுகினாலும் மாறாத சிற்பம் உன் காதல் மட்டும் தான் பெண்ணே என்மீது
♥ ♥ ♥
என்றுமே உன் நிழலை பின் தொடரும் ஆசையில்லை எனக்கு உன் நிழலாக பின்தொடரும் ஆசைமட்டும் தான் காத்திருக்கிறேன்
♥ ♥ ♥ ♥
நிலவாக நீ இருக்கிறாய் தேய்ந்து மறைந்து வளர்வது மட்டும் நான் உன் நினைவுகளால்
♥ ♥ ♥ ♥ ♥
நமக்காகவே வாழ்ந்த நாட்கள் நம் இதயத்தில் பிறந்த குழந்தையாய்
எந்நேரமும் சிணுங்கிக்கொண்டே இருக்கும் யார் அறிவார் எதற்கு என்று
♥
உன் கூந்தலோடு மட்டும் எப்பொழுதும் கவிதை எழுதுகிறது உன் கை விரல்கள்
அழகு தான்
♥ ♥
உன் மூச்சுகாற்று காற்றில் கலக்கிறது எனக்கு மட்டும் ஏன் சங்கிதமாய் கேட்கிறது
♥ ♥ ♥
ஒரே குடையில் இருவரும் நனைந்தது பாதி நனையாதது பாதியாய் நம் காதல்
♥ ♥ ♥ ♥
ஒரு கோடி பூக்கள் ஒன்றாக சேர்ந்து மொட்டுவிரித்தால் அவ்வளவு அழகு உன் காதலும் நீயும்
♥ ♥ ♥ ♥ ♥
ஒரு கோடி பூக்கள் ஒன்றாக சேர்ந்து மொட்டுவிரித்தால் அவ்வளவு அழகு உன் காதலும் நீயும்
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த வரிகள்
ருத்ரா
eda highlight panradune teriala...i like all the above
ReplyDeleteஒரு மாதத்தில் 101 பதிவுகளா ?
ReplyDeleteஆச்சரியத்தில் மிதக்கிறேன்
இன்றுதான் பதிவுக்குள் நுழைந்தேன் அருமை
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்
//Ramani said...
ReplyDeleteஒரு மாதத்தில் 101 பதிவுகளா ?
ஆச்சரியத்தில் மிதக்கிறேன்
இன்றுதான் பதிவுக்குள் நுழைந்தேன் அருமை
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி வாசித்தமைக்கு உங்களை பதிவுக்குள் வரவேர்கிறேன் உங்கள் வாழ்த்துக்கு வணங்குகிறேன்
தொடர்ந்து அதரவு தரும்படி கேட்டுகொள்கிறேன்