Showing posts with label dec-8-12. Show all posts
Showing posts with label dec-8-12. Show all posts

Thursday, 8 December 2011

என் கீதம்



இன்றே இனிய பயணம் உன்னோடு அழகாக தொடங்கும் மெய்யான நம் காதலால் வா பெண்ணே நாம் வாழ்ந்திடலாம் 
சோகம் ஏதும் இல்லா சொர்கமாகமாகும் அன்பே இந்த காதலாலே வா பெண்ணே நாம் வென்றிடலாம் 
என்னோடு நீயும் அட உன்னோடு நானும் ஒன்றாக சேரும் இந்த காதலும் ஓர் புது இனம்தான் 
என் நெஞ்சம் எல்லாம் உன் நினைவால் பூக்கும் இந்த காதலுக்கு என்றும் நானும் அடிமைதானே
என்ன செய்வேன் அட ஏது செய்வேன் ஒரு சின்ன சிறு பிள்ளையாக உன்னை சுற்ற செய்கிறதே இந்த காதல் தானே 
கள்ளம் கபடம் இன்றி ஒரு சிறு பிள்ளை புன்னகை போல் உன் வெள்ளை நெஞ்சாலே என்னை உன்னோடு சேர்ர்த்துவிட்டாய் 
என்ன செய்தாய் ஒரு தாய் பிள்ளை போலே என் காதலும் உன்னை பின்தொடர்கிறதே 
ஒரு பூவுக்குலே தேனாகும் இந்த காதல் எனக்குள்ளே நீயும் வந்து சேர்ந்ததனால்
உன் கை பிடித்தாலே போதும் என் ஆயுள் ரேகையும் நீளும் வா பெண்ணே நாம் வாழ்ந்திடலாம் சொல்ல சொல் இன்றியே நாம் காதலால் தேய்ந்திடலாம் 
உன் கண் பார்த்தே நம் புதுஉலகம் படைத்தேன் வா என்னவளே நாம் அங்கு சென்றிடலாம் 
என் தோல்வி எல்லாம் நீ தோல்குடுத்தால் போதும் நான் வென்று சேர்த்திடுவேன் 
என் தாகங்கள் தீர்க்கும் புது மழை தண்ணீர் போல நீயும் உன் காதலுமே
என் சோகம் எல்லாம் அடி உன் புன்னகை பார்த்தால் சொல்லாமலே அது சென்றிடுமே
காலங்கள் தாண்டும் என் காதல் வாழ்க்கை அடி பெண்ணே உன்னால் இங்கு தொடங்கியதே....