Tuesday, 13 December 2011

விடை இல்லா தேடல்

எங்கே தொடங்கியது நம் காதல்


பரபரப்பாக சென்று கொண்டிருந்த என் நாட்களில் பதட்டம் இல்லாமல் நுழைந்தவள் நீயடி அழகான பெண்களை எல்லாம் அரைநிமிடத்தில் கடந்துவிட்டேன் ஆனால் நீ மட்டும் எல்லாமுமாய் தெரியவைத்தாய் எனக்கு இந்த நிமிடம் இப்படியே முடிந்துவிட கூடாது என்றதாலேயே தொடங்கியதா நம் காதல்



முதன் முதலில் உன் கண் பார்த்த நிமிடத்திலா
    இல்லை சட்டென்று உன் பார்வை என்மீது பட்டநேரத்திலோ 
முதன் முதலில் உன் குரல் கேட்ட நிமிடத்திலா 
இல்லை என் பெயரை அழைத்த நேரத்திலோ
    இல்லை பட்டன்று உன்விரல் என்னை தீண்டிய நிமிடத்திலா
      இல்லை பேச முடியாமல் நாம் இருவரும் பார்த்து 
   திகைத்த மௌனத்தில் தொடங்கியதோ....

உன்னோடு பேசி பேசி தொடங்கியதோ 
இல்லை பேசாமல் உன்னை பார்த்து கொண்டே
இருந்ததால் தொடங்கியதா
உன் கை விரல்கள் பதித்த காகித வரிகளை
படித்து பார்த்து பார்த்து தொடங்கியதா 
இல்லை என் கிறுக்கல் பதித்த 
காகிதத்தை பார்த்ததும் தொடங்கியதா
நம் தேர்ச்சிகளில் தொடங்கியதோ
இல்லை என் தோல்விகளில் தொடங்கியதோ......

உன் பின்தொடர்ந்து சென்றதால் தொடங்கியதோ
இல்லை நாம் இணைந்து சென்றதால் தொடங்கியதோ
நம் சோகங்களை பகிர்ந்தால் தொடங்கியதோ
   இல்லை நாம் சந்தோஷ்த்தில் திளைத்து தொடங்கியதோ....

உன்னோடு பயணிக்கும் போது தொடங்கியதோ
இல்லை நம் பயணம் முடியும் போது 
பிரிவு என்ற எல்லையில் தொடங்கியதோ
   உன் புன்னகையினை பார்த்த போது தொடங்கியதோ 
இல்லை உன் புன்னகைகாக நான்
செய்த கேலிக்கைகளால் தொடங்கியதோ....

உன் கண்ணீரை துடைப்பதற்காக தொடங்கியதோ
இல்லை நம் கண்ணீரை இணைபதற்காக தொடங்கியதோ
நமக்காக கொடுத்த பரிசு பொருள்களில் தொடங்கியதோ
இல்லை அதை ஏற்ற நாட்களில் தொடங்கியதோ.....



உன் அழகான மௌனத்தில் தொடங்கியதோ
இல்லை என் இடைவிடாத பேச்சால் தொடங்கியதோ
அழகான உன் வெட்கத்தில் தொடங்கியதோ
இல்லை இல்லை உன்னை  வெட்கபடுத்திய
என் வார்த்ததைகளில் தொடங்கியதோ........

அழகான உன் கோவத்தில் தொடங்கியதோ
இல்லை உன்னை சமாதானபடுத்திய 
நிமிடத்தில் தொடங்கியதோ
சின்ன சின்ன சண்டைகளில் தொடங்கியதோ
இல்லை அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் 
பக்குவத்தில் தொடங்கியதோ.....

உன்னுடனான கைபேசி உரையாடலில் தொடங்கியதோ
இல்லை இணைப்பு துண்டிக்க படும்போது தொடங்கியதோ
உன் உறவை பார்த்து தொடங்கியதோ 
இல்லை உன் உறவுக்காக தான் தொடங்கியதோ....

ஒரே இருக்கைகளில் இருந்ததால் தொடங்கியதோ
   இல்லை அதில் இணைந்த நம் இருகைகளால் தொடங்கியதோ
கொடுத்த இனிப்புகளால் தொடங்கியதோ
     இல்லை அதை கொடுத்த விருப்பத்தால் தொடங்கியதோ.... 

கடுங்குளிர் இரவில் தொடங்கியதோ
இல்லை கடுவெயில் பகலில் தொடங்கியதோ
நள்ளிரவு நிலாவை சேர்ந்து ரசித்து தொடங்கியதோ 
   இல்லை பகல் சூரியனால் நிழல் சேரும் போது தொடங்கியதோ
அழகான மழையில் நனையும்போது தொடங்கியதோ
   இல்லை நனைந்ததை துவட்டுவதற்காக தொடங்கியதோ...

உன் இதழ் பார்த்து தொடங்கியதோ 
இல்லை இதழ் பதிக்க தொடங்கியதோ
  உன் கொலுசு இசையை ரசித்து தொடங்கியதோ
       இல்லை உன் வளையல் கானம் கேட்க தொடங்கியதோ....

நம் விடுமுறைகளில் தொடங்கியதோ 
இல்லை நம் விடுதலைகாக தொடங்கியதோ
உன் பிராத்தனைகளால் தொடங்கியதோ 
இல்லை என் மீது பரிதாபதால் தொடங்கியதோ
கொடுத்த பூக்களால் தொடங்கியதோ இல்லை 
    அதில் இருந்த முள் குத்தியதால் தொடங்கியதோ..... 


உன் முகம் பார்ப்பதர்காகவே தொடங்கியதோ 
 இல்லை நம் மனம் சேர்ப்பதற்காக தொடங்கியதோ
உன் கரம் பற்றியதால் தொடங்கியதோ 
      இல்லை உன் கரம் பற்றுவதர்காகவே தொடங்கியதோ.....

உன் கண் சிமிட்டும் நேரத்தில் தொடங்கியதோ
   இல்லை உன் கண் சிமிடுதலால் தான் தொடங்கியதோ
உன்னை முழுவதுமாய் ஏற்று தொடங்கியதோ
   இல்லை என்னை மாற்றத்தான் தொடங்கியதோ.....

நம் தோழமையால் தொடங்கியதோ 
     இல்லை நீ என் தோல் சாய்ந்ததால் தொடங்கியதோ
     நாம் இருவரின் பகிர்தலில் தொடங்கியதோ 
         இல்லை நம் புரிதலில் தான்  தொடங்கியதோ......


தேடல் தொடர்கிறது ..........

2 comments:

  1. கவிதை மிகவும் அருமையாக உள்ளது, எல்லோர்க்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது
    நேசமுடன்
    ருத்ரா

    ReplyDelete