உன்னுடன் என்னை போல்
உன் வீட்டு கண்ணாடி உன்னை ஒருமுறையாவது படம் பிடித்து விடும் ஆசையில் தேய்ந்து கொண்டிருகிறது இப்பொழுது பாதரசம் அற்று நிற்கிறது
நீ என்னை சுற்றி எங்கு நின்றாலும் உன் பிம்பம் என் மீது என்று கர்வம் கொள்கிறது
உன்னை புரிந்து கொண்ட உற்ற நண்பனாக நான் நீ என்னவெல்லாம் செய்கிறாயோ நானும்
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத என் பேரழகி நீ
உன் உதட்டு சாயம் என் மீது பட்டு நானும் வெட்கத்தில்
நீ முகம் பார்க்கும் கண்ணாடியாக வாழ எனக்கு ஆசையில்லை உடைந்து விடும் ஆசைமட்டும் தான் அப்பொழுது தான் உன்னை எத்தனை மடங்கா பிரதிபலிக்கிறேன் என்று உனக்கு தெரியும் என் காதலாக
நீ என்னை பார்க்கும போது கண்ணாடிஓவியமாக மற்றவர்களுக்கு தெரிகிறது அவ்வளவு அழகு நீயும்நானும்
நீ என்ன செய்தாலும் உன்னை அசையாமல் பார்த்து கொண்டேயிருப்பேன் அழகாக
உன் தனி அறை குறும்பு , அழகு, தூக்கம் , சந்தோஷம், அழுகை ,பயம் , வெறுமை அனைத்தையும் ஏற்கும் பாக்கியசாலி
உன் அழகை முதன் முதலில் ரசித்து திருத்தம் சொல்வதால் நான் உன் முதல் ரசிகன்
நீ என்னை தினமும் பார்ப்பதால் நானும் அழகாக இருக்கிறேன் என்று என்னை சுற்றி இவ்வளவு திருஷ்டி பொட்டுக்கள் நீ தினமும் வைக்கும் உன் ஒட்டுபொட்டுக்கள் என் மீது
நீ என்னை தான் பார்க்கிறாய் நானோ உன்னை மட்டுமே காட்டுகிறேன் உனக்காகவே நான்
நீயும் என்னை போலத்தான் எத்தனை முறை என்னை அழித்தாலும் மீண்டும் வேறு வடிவத்தில் இருப்பேன் நீயும் அன்பால் தாய் மகள் மனைவி என்று
எனக்கே பார்க்கும் ஆசைவருகிறது உன்னை நீ பார்க்கும் போது நானும் என்னை திருத்திக்கொள்கிறேன் உன் அழகை களவாடி
நீ பர்காவண்ணம் உன்னை ஓரமாக பார்த்து ரசிக்கும் நானும் ஒரு கள்வன்
தெரியாமல் கை விட்டாலும் சிதரிவிடுவேன் உன்னாலே நான்
யாரும் இல்லா நேரத்தில் உனக்கு துணையாக நான் காவலனாக என்றுமே...... உன்னோடு நான் இறுதிவரை
No comments:
Post a Comment