எங்கிருந்து தொடங்கியது என்று தெரியாத காதல்
தினமும் வளரும் வளர்பிறை காதல்
சின்ன புன்னகைகளில் உயரத்திற்கு பறக்கும் பருந்து காதல்
பூமி மாற்றத்தில் தோன்றியதா,பூமியை மாற்றவே தோன்றியதா தெரியாத காதல்
எத்திசையும் வென்று வரும் உறுதி காதல்
பகைவனையும் அன்பால் மாற்றும் திறன் காதல்
கோழையையும் மாற்றும் வீரன் காதல்
பூத்துகுலுங்கும் கனவுகள் காதல்
விளைவுகள் அறியா விசை காதல்
தோல்விகளை மாற்றும் வெற்றி காதல்
எல்லோருக்கும் பிடிக்கும் காதல்
சொல்வதும் வெல்வதும் கடினம் என்று தெரியாத காதல்
மாய மயக்கும் கண்ணாடியாம் காதல்
காதல் தொடக்கத்தில்,
ஒரு சில அசட்டு புன்னகைகள்
ஒரு சில நிமிட தயக்கம்
ஒரு சில வலியும் குளிர் நடுங்கும் பேச்சுக்கள்
மீண்டும் வினா தெரியா விடை தேடும்...காதல்
ஒருசில பூக்களில் தொடங்குமாம்
ஒருசில புன்னகைகளில் தொடங்குமாம்
ஒருசில பார்வைகளில் தொடங்குமாம்
ஒருசில உதவிகளில் தொடங்குமாம்
ஒருசில ஆறுதலில் தொடங்குமாம்
ஒருசில வெடக்தில் தொடங்குமாம்
ஒருசில மௌனத்தில் தொடங்குமாம்
ஒருசில கண்ணிர்களில் தொடங்குமாம்
ஒருசில கவிதைகளில் தொடங்குமாம்
ஒருசில நட்பில் தொடங்குமாம்
ஒருசில ஆசைகளில் தொடங்குமாம்
ஒருசில பிரிவுகளில் தொடங்குமாம்
ஒருசில புரிதலில் தொடங்குமாம்
மீண்டும் அழகாக தொடங்குகிறது காதல்............... யாரும் அறியாமலே!
No comments:
Post a Comment