இரவில் கண் விழிக்கும் குழந்தையாக
தேடுகிறேன் என் காதலை
என் கண்ணோடு ஓரமாய் உன் காதலும்
ஈரமாய் கசிவதை காணுகிறேன்
பேசும் வார்த்தை இடையில் சிக்கி தவிக்கும்
மூச்சு கற்றாய் என் காதலும் உன்னிடம்
படிக்கும் பக்கங்கள் எல்லாம் உன் நினைவுகளாக
இருக்க எதில் தேர்ச்சி அடைவதற்கு
இந்த தேர்வுகள்
இரவில் தூரத்தில் கேட்கும் வரிகள் புரியா
இசையில் உன் நினைவுகள் உலாவருவதை
உணர்கின்றேன்
என்னை முச்சடைக்க வைக்கிறது
சிறகடித்து கொண்டே இருக்கும் உன்
வண்ணத்துபூச்சி இமைகள்
சிறகடித்து கொண்டே இருக்கும் உன்
வண்ணத்துபூச்சி இமைகள்
வீசும் காற்றுக்கு கூட வியர்க்கிறது உன்
மீது பட்டவுடன்
என் விடியலை எல்லாம் நனைத்து கொண்டு
இருக்கிறாய் பனித்துளியை
என் தோட்டது வெள்ளை ரோஜாக்கள் எல்லாம்
சிவந்தன உன்னை பார்த்த வெட்கத்தில்
உன் முகம் தெரியாத நிழலையும்
இன்னும் என் மீது சுமந்து உன்னை நேசித்து
கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை எங்காவது பார்த்து பேசும் ஆசையில்
கடிகாரத்தில் துடித்து கொண்டுதான்
இருக்கிறது என் வினாடிகள்
பேசாத பூக்கள்கூட என் அன்பை சொல்லிடுதே
பேசும் உன் வார்த்தை மௌனம்
என்னைத்தான் கொன்றிடுதே
உன்னை நினைத்து கண்ணீர் சிந்தி
கலங்கிவிட்டது என் கண்களும் கரைந்துதான்
போகிறது என் இதயமும்
உனக்காக இருந்த என் நிமிடங்கள்
கானல்நீராய் மாறி என்னை
ஏமாற்றி கொண்டு இருக்கிறது
அவள் கண்கள் பேசிய எல்லா மொழிகளையும்
புரிந்துகொண்டேன் அவள் கடைசியாய்
பேசிய என் தாய் மொழி புரியாமல்
மரணித்து கொண்டு இருக்கிறேன்
ஒருமுறை சொல்லிவிடு அந்த சந்தோஷமே
போதும் மூச்சடைத்து விடுவேன் பெண்ணே
சிலந்தி வலையில் சிக்கியதாக துடித்து
கொண்டுருகிறது நீ இன்றி என் நினைவுகள்
என் இதய சிப்பியில் இன்னுமும் உன்
நினைவு முத்துகள் துடித்து கொண்டுதான்
இருக்கிறது அதனால் தான் வாழ்கிறேன்
என் மரணநிலையிலும் உன்னை பார்க்க என் இதயம்
கடைசியாக மூன்று முறை துடிக்கும் வந்துவிடு
இல்லை வெந்துவிடும் என் காதல்
யாரும் அறியாமலே.....!
அட.. பின்றீங்க நண்பா..
ReplyDelete\\கோவி said...
ReplyDeleteஅட.. பின்றீங்க நண்பா..//
நன்றி ஆதரவுக்கு தொடரட்டும் உங்கள் ஆதரவு நான் பயணிக்க