என் இயல்பு வாழ்க்கையில் இடை மறித்து
பயணம் செய்ய வந்தவள் நீ போதும் எனக்கு!
என் நிழல் அறியாவண்ணம் என் நிஜத்தில்
நுழைந்தவள் நீ போதும் எனக்கு!
என் இரு புருவத்திற்கு இடையில்
புதையலாய் நுழைந்தவள் நீ போதும் எனக்கு!
உன் வார்த்தைகளில் மறைந்து இருக்கும்
என்மீது உள்ள காதல் போதும் எனக்கு!
நான் காதல் சொல்கையில் நீ பதில்தந்த
உன் வெட்கமே போதும் எனக்கு!
என் காதல்பூத்த உன்
முதல் மௌனம் போதும் எனக்கு!
நம் காதலை உணர்ந்த அந்த
நிமிடம் போதும் எனக்கு!
என் கண்ணீரை துடைக்கும் உன்
கைகள் போதும் எனக்கு!
என்னை சுற்றி இருக்கும் உன்
சுவாசம் உயிர்வாழ போதும் எனக்கு!
விசும் காற்று நுழையா வண்ணம் உன்
அணைப்பு போதும் எனக்கு!
என் தொலைதூர பயணம் உன்
கை பற்றியே போதும் எனக்கு!
என் விடியலுக்காக காதிருக்கும் உன்
பார்வை போதும் எனக்கு!
என் கருகிய இரவுக்கு உன் ஒற்றை
புன்னகை போதும் எனக்கு!
என் கனவுகள் உன் மடி
இருந்தால் போதும் எனக்கு!
என் வானம் எங்கும் வெள்ளி மழை
வானவில் நீ இருந்தால் போதும் எனக்கு!
என் களைப்பு உன் தோள்
சாய்ந்தால் போதும் எனக்கு!
என் தாகம் உன் ஒற்றை
முத்தம் போதும் எனக்கு!
நான் தடுமாறும் போது உன்
கண் அதிர்வு போதும் எனக்கு!
என் மாற்றத்தில் என்றும்
நீ இருந்தால் போதும் எனக்கு!
நீ திருத்துவதற்காக நான் பிழையாகவே
இருக்கிறேன் அது போதும் எனக்கு!
நீ ஒருபுறம் கரைகிறாய் மறுபுறம் நான்
எரிகிறேன் அது போதும் எனக்கு!
என் ஓவியத்தில் என்றும்
நீ புன்னகை போதும் எனக்கு!
என் விடியலில் பனித்துளியாய்
நீ போதும் எனக்கு!
என் இரவில் நட்சத்திரமாய்
நீ போதும் எனக்கு!
என் கவிதைகளில் வரிகளாய்
நீ போதும் எனக்கு!
என் முயற்சியில் என்றும் உன்றுகோளாய்
நீ போதும் எனக்கு!
என் வெற்றிகளின் பின் இருக்கும் உன்
முயற்சி அது போதும் எனக்கு!
என் தோட்டத்து பூக்களில்
நீ முள்ளாக போதும் எனக்கு!
என் கேள்விக்கு உன் பட்டாம்பூச்சி
கண் செய்கைள் போதும் எனக்கு!
என் கண்களில் கட்சியாய் என்றும்
நீ போதும் எனக்கு!
என் வெயிலிலும் மழையிலும் குடையாக
நீ போதும் எனக்கு!
என் வலிகளில் மருந்தாக
நீ போதும் எனக்கு!
என் நிஜங்களில் நிழலாக
நீ போதும் எனக்கு!
என் நேரங்களில் நீ சில
விநாடிகலாய் இரு போதும் எனக்கு!
என் எல்லா சோகங்களை மாற்றும் நீ மறைக்கும்
ஒற்றை கண்ணீர்துளி போதும் எனக்கு!
என் வாசலில் கோலங்கள் தேவை இல்லை
நீ கால்தடம் பதித்துசெல் போதும் எனக்கு!
என் கற்பனையில் உன் முகம்
என்றும் போதும் எனக்கு!
என் காலங்களை கடத்திய உன்
காதல் போதும் எனக்கு!
என் வாழ்கையில் என்றுமே உன்
நினைவுகள் போதும் எனக்கு!
உன் நினைவின் போது வரும் என்
கண்ணீர் துளி போதும் எனக்கு!
சீரிய தொடர் சிந்தனையில் விளைந்த்
ReplyDeleteஅன்புக் காதல் மனம் விவரித்துப் போகும் கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
//Ramani said...
ReplyDeleteசீரிய தொடர் சிந்தனையில் விளைந்த்
அன்புக் காதல் மனம் விவரித்துப் போகும் கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி உங்கள் வாழ்த்துக்கு தொடரட்டும் உங்கள் ஆதரவு