Tuesday, 20 December 2011

பூஜ்ஜிய வாழ்க்கை



எங்கு மூச்சடைத்து தொடங்கினோமோ அங்கேயே மூச்சடைத்து அடங்குகிறோம்

சற்றே தவழ்ந்து நடந்து செல்கிறோம் போகாத இடம் எல்லாம் பயணிக்கிறோம் இறுதியில் மீண்டும் தவழ்கிறோம் தடுமாறுகிறோம்

நாம் ஆங்காங்கே இளைப்பாறும் மரங்களாக சில உன்றுதலை ஆறுதலையும் அன்பையும் தேடுகிறோம் அதில் சிலர் அன்பாக இறுதிவரை நம்முடன் பயணிக்கிறார்கள் சிலரை நாம் ஆங்காங்கே விட்டு செல்கிறோம் நம் அடையாளங்களாக

பயணம் என்னவோ தொடங்கிய இடத்திலேதான் முடியும் என்றாலும் நம் தேடல் தீரா தாகமாக தொடர்கிறது

புரிந்ததை எண்ணி சந்தோஷபடுவதை விட புரியாததை எண்ணி வருத்தம் அடைவதே இங்கு அதிகம் 


இங்கு நம்மை அங்கீகரிப்பதும் இல்லை நம் கோவத்தில் உள்ள  உண்மைகளை புரிந்துகொள்வோரும் இல்லை 

எதை தேடி செல்கிறோமோ அதை விடுத்து கிடைப்பதை எல்லாம்  தனியாக சேகரித்து வைத்து மகிழ்ச்சி பெற்றதாக பிரமிப்பு அடைகிறோம் நிரந்தரம் இல்லாதது அவை 

வந்த வேலை ஒன்று செய்த வேலை ஒன்றாக திசை மாறுகிறோம்

நம் ஆசைக்கு மீறிய சில செயல்களை செய்து தான் திருப்தி அடைகிறோம்
நம் கஷ்டங்கள் தொடங்குவது அந்த ஆசையினாலே என்று தெரிந்தும் புரிந்து கொள்ள மறுக்கிறோம் பழியை வேறு எங்காவது சுமத்தி நாம் சாந்தி அடைகிறோம்

நம் வாழ்க்கை இருளை போக்குவதற்கு குறைந்த பட்சம் நம் கண்களை விழித்தாலே போதும் செய்வதில்லை வெளிச்சம் தரக்கூடியவைகளை தேடுகிறோம் சிலவற்றை வெளிச்சம் தருவதாக நம்புகிறோம் 

எதற்க்கு ஏன் என்று புரியாமல் ஏற்றுகொள்கிறோம் மீண்டும் மீண்டும் முழுவதுமாக கண்விழிக்காமல் தேடிக்கொண்டே அழைகிறோம் துரத்துகிறோம் உலகம் முழுவதும் 

ஒருவர் அன்பு ஒருவனை எல்லாமுமாய் ஆக்கும் இல்லாமலும் ஆக்கும் கிடைக்கும் அன்பை பொருத்து

கடைசி வரை எதுவுமே நம்முடன் பயனிப்பதில்லை ஆங்காங்கே நமக்கு உன்றுகோலாக இருந்து செல்கிறார்கள் 

நாம் எங்கு முடியாதவனாய் ஆகிறோமோ அங்கே தான் அன்பை தேட தொடங்குகிறோம் உணர்கிறோம் 

விட்டு வந்ததை விட்டு சென்றதை நினைத்து வருத்தம் அடைகிறோம் 
நம் கைபிடித்து அழைத்து வந்து நடுகாட்டில் கைவிட்டு கண்கட்டி விட்டு சென்றால் உணரும் அந்த ஆபத்தான தனிமை தேடலை புரிந்து கொண்டு சங்கடபடுகிறோம் எத்தனை முறை கதறி அழைத்தாலும் திரும்பபோவதில்லை அது புரிவதர்க்குள் நம் நேரம் குறைகிறது தூரம் அதிகரிக்கிறது 

அதன் பின் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பதம் பார்த்து வைக்கிறோம் ஆனாலும் அடிவிலத்தான் செய்கிறது மேலும் மேலும் நம்மை விட்டு சென்ற ஞாபகங்களும் நிஜங்களும் நிகழ்வுகளை உணர்த்துவதாக எண்ணி முழ்கிபோகிறோம் 

நாம் சென்று கொண்டிருப்பது ஒரு வழிபாதை இங்கு திரும்பி செல்வது கடினம் கடந்துவந்தது கடந்து வந்ததுதான் ஆங்காங்கே நாம் கடந்து வந்த தடயங்கள் தான் நிலைத்து இருக்கும் 

ஒருசில கண்ணீர் துளிகள் ஒருசில புன்னகைகள் நம் வாழ்க்கையவே மாற்றவும் செய்யும் ஏமாற்றவும் செய்யும்  எப்பொழுது எங்கே எது நடக்கும்னு தெரியாத பயணம் இதில் விடை சொல்வதும் விடை பெறுவதும் எளிதல்ல

நம்மை விட்டு சென்றதை எல்லாம் தேடி தேடி வீதி வீதியாக அலைவதை விட நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் 

கடைசி வரை காரணம்மற்ற எல்லா உணர்வுகளும் உறவுகளும் கரைபுரண்டு ஓடும் நதி இந்த வாழ்க்கை சேரும் இடம் தெரியாததாய் நடிக்கிறோம் 

விடுதலையாகி சென்ற பறவை கூடு திரும்பாது அதே பயணம் இந்த வாழ்க்கை 

தொடர்ச்சியாக முற்று புள்ளி வைத்தால் பயணம் முடியாது தொடரும் என்று புரியாத நாம் அதை தேடுகிறோம் அதுவும் நம்மை தேடி பிடிக்கும் எப்பவேண்டுமென்றாலும் இங்கு எதிர்பார்த்து ஏமாறுவதே அதிகம் 

ஓசை இல்லா மனதிலும் ஓசை இல்லா மயானத்தில் உறங்கி கொண்டிருக்கிறது ஓராயிரம் ஆசைகள் மீண்டும் பயணத்தை தொடங்குவதற்கு 


வழிதடம் தெரியா பயணம் தொடரும்..... 




3 comments:

  1. பயணங்கள் பற்றிய அருமையான கவிதை/கட்டுரை.

    ReplyDelete
  2. அற்புதமான படைப்பு
    தொடருங்கள்...

    ReplyDelete
  3. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
    அற்புதமான படைப்பு
    தொடருங்கள்.//

    நன்றி அதரவு தொடரட்டும்

    ReplyDelete