நட்சத்திர இரவு ஒரு நிலவோடு
நிலாவில் நடப்பது கடினம் என்று சொன்னார்கள்
ஆனால் இங்கு ஒரு நிலவே என்னுடன்
மிதந்து கொண்டிருக்கிறது அவளாக
நிலவை பின் தொடர்ந்தேன் நிலத்திலே
கைபற்றினேன் அவள் கைபிடித்து
நிலவை தொட்டுவிடும் ஆசையில்லை எனக்கு
உன் நிழல் பற்றினாலே போதும் பெண்ணே
நிலவை சிறை பிடிக்க எண்ணி ஏமாந்தவை
என் ஜன்னல் கம்பிகள் உன்னால் என் இதயம்
பாதசுவடுகள் நடக்கையில மட்டும்தான்
வரும் என்ன அதிசயம் நீ மிதகையிலும்
நான் உன்னை பார்கிறேன் வெட்கத்தில் நிலா மறைகிறது
நீ குளத்து நீரில் முகம் துடைகிறாய் நிலா
சிலிர்கிறது பிம்பமாக
அழகிய பூமிக்கும் அழகிய வானுக்கும் வைத்த
திருஷ்டி பொட்டுக்கள் நீ நிலா
நீ முகம் மறைத்த வெட்கத்தில் மேகத்தில்
ஒளிந்த வளர்பிறை நிலாக்கள்
நான் எங்கு சென்றாலும் நீயும் தொடர்கிறாய் நான்
நின்றால் நீயும் அசையாமல் அழகாக
மஞ்சள் பூசிய அவள் முகம் அந்தி உதிக்கும் நிலவு
என்றுமே வெள்ளை உடை அணிகிராயே நீதான்
தேவதையோ இல்லை பெரியாரின் பக்தையோ
பிறை நிலா உன் நெற்றியே என்றும் ஞாபகம்
கருப்பு மாளிகையில் என்றுமே வெள்ளை நிலா
நீ இங்கு வெள்ளை மாளிகையில்
உலாவருகிறது கருப்பு நிலா உன் கண்கள்
நிலவில் பன்னீர்பூக்கள் உன் சிரிப்பு
உன் கூந்தல் மல்லிகைபூக்கள் இரவு
நிலவாக என் ரசனையில்
சந்திரகிரகணம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது
நீ கண் சிமிட்டுகையில்
நீ உறங்குகையில் கூட என் தனிமை
போக்குவதற்கு வருகிறாயா நிலவாக
நிலவில் இருந்து சில முத்துசிதறல்
உன் கண்ணீர் துளிகள்
நீயும் நிலவை போல் என்னையே சுற்றி
வருகிறாய் வேர் எதுவும் அறியாமல்
நான் பார்க்காமல் போன ஆயிரம் பௌர்ணமிகள்
ஒன்றாக அவள் வெள்ளை பட்டு உடுத்தி வருகிறாள்
என் காதலாக நீ வளர்க்கிறாய் உன்
ஏக்கமாக நான் தேய்கிறேன்
பால்சிந்தும் நிலவில் தேன் சிந்தும் உன் வார்த்தை
என்னோடு நீ இருந்தால் நிலவும் இருட்டாக தெரிகிறது
பௌர்ணமியில் தான் அதிகம் கொந்தளிகுமாம்
கடல் அலைகள் இங்கு ஒரு பௌர்ணமியே
கொந்தளிக்கிறது என்மீது அன்பு கொண்டு
அழகாக அவள் கோவத்தில்
என் ரசிகை
பால்சிந்தும் நிலவில் தேன் சிந்தும் உன் வார்த்தை
ReplyDeleteஅருமையான வரிகள்
\\sasikala said...
ReplyDeleteபால்சிந்தும் நிலவில் தேன் சிந்தும் உன் வார்த்தை
அருமையான வரிகள்//
நன்றிகள் அதரவு தொடரட்டும் தொடர்ந்து பயணிக்க உங்கள் ஆதரவும் தேவை